ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்! என்ன கரணமாக இருக்கும்? Mohanlal

மோகன்லால் சங்கர் படத்துக்கு மறுப்பு தெரிவிப்பு!

Mohanlal, Ram Charan, S. Shankar 11-Apr-2022

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரனை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக ‘ராம்சரண் 15’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார்.

Mohanlal, Ram Charan, S. Shankar 11-Apr-2022

இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்காக நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் கதை கேட்ட பிறகு அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் ஊழல் செய்து அதிகமாக சொத்து சேர்க்கும் அரசியல்வாதி கதாபாத்திரம் என்பதால் மோகன்லால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Mohanlal, Ram Charan, S. Shankar 11-Apr-2022

இதனை தொடர்ந்து படக்குழு மாநாடு படத்தின் மூலம் பெருமளவு கவனம் பெற்ற எஸ்.ஜே சூர்யாவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இது குறித்து எந்தவிதமான அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.