Beast Booking
Vijay, Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Box Office.
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி மிக வேகமாக டிக்கெட் விற்று வருகின்றது.
வரும் 13 ஆம் தேதி பீஸ்ட் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் புதிய அப்டேட்களை வெளியிடும் போதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிக்க ஆவலுடன் இருப்பதை அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், படத்துக்கான முன்பதிவு தொடங்கி பல இடங்களில் ஹவுஸ்புல் ஆகி வருவதுடன், இதுவரை சென்னை ரோகிணி திரையரங்கில் வரை சுமார் 25 ஆயிரம் டிக்கெட் விற்று மிகப்பெரும் சாதனை செய்துள்ளதாம்.

இன்னும் ரிலிஸிற்கு இரண்டு நாட்கள் இருப்பதால் இவை 30 ஆயிரத்தை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.