Beast 1st Show
Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty,
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி மிக வேகமாக டிக்கெட் விற்று வருகின்றது.

வரும் 13 ஆம் தேதி பீஸ்ட் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் புதிய அப்டேட்களை வெளியிடும் போதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிக்க ஆவலுடன் இருப்பதை அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் முதல் நாளே வசூலை அள்ள வேண்டும் என தயாரிப்பாளர் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மேலும் வந்த தகவல்களின் படி, பீஸ்ட் படத்தின் முதல் காட்சிகள் அதிகாலை 4 மணிக்கே ஆரம்பிக்கப்படுகிறது. அதிகாலைக் காட்சிகளுக்கு ஒரு டிக்கெட்டுக்கு 1500 ரூபாய் வசூலிக்கின்றனர். அதுமட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்கள் இன்னும் மேலே சென்று நள்ளிரவு ஒரு மணிக்கு காட்சியை போடலாம் என்று திட்டம் போட்டு வருகின்றனர். அந்தக் காட்சிக்கு 2000 ரூபாய் வாங்கலாம் என திட்டமிட்டுள்ளனராம்.
இதுகுறித்து நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சில பேர் 2000 ரூபாய் என்பது மிக அதிகம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் அதையும் மீறி திட்டத்தை செயற்படுத்த சில திரையரங்குகள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.