ஜி.வி.பிரகாஷ்-மைக்செட் ஸ்ரீராம் கூட்டணியில் ரசிகர்களை கவர்ந்த பாடல்! G. V. Prakash Kumar

ஜி.வி பிரகாஷ் குரலில் ரசிகர்களை கவர்ந்த பாடல்!

G. V. Prakash Kumar, MicSet SriRam, Vaadi En Chella Kutty 09-Apr-2022

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமாக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது ‘வாடி என் செல்லக்குட்டி’ என்ற ஆல்பம் பாடலை பாடியிருக்கிறார்.

G. V. Prakash Kumar, MicSet SriRam, Vaadi En Chella Kutty 09-Apr-2022

தற்போது திரைப்பட பாடல்களுக்கு இணையாக தனி ஆல்பம் பாடல்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஏ.ஆர் ரகுமான் முதல் பல்வேறு இசை கலைஞர்கள், கவிஞர்கள் தற்போது தனி இசை ஆல்பங்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மைக்செட் ஸ்ரீராம் இரண்டாவது முறையாக ஒரு வீடியோ பாடலை வெளியிட்டிருக்கிறார். இளைஞர்கள் முதல் எல்லோரையும் கவர்ந்த நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குரலில் உருவாகி இருக்கும் “வாடி என் செல்லக்குட்டி” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

G. V. Prakash Kumar, MicSet SriRam, Vaadi En Chella Kutty 09-Apr-2022

மைக்செட் ஸ்ரீராம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ஏற்கெனவே உருவான ஹேய் சிங்கரி பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘வாடி என் செல்லக்குட்டி’ என்ற பாடலும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழாவில், மீனா சாப்ரியா, நடிகர் விக்னேஷ்காந்த், கதிர், ராகுல் ஆகியோர் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.