கேஜிஎப் யாஷின் கோட்டை கர்நாடகாவை தெறிக்க விட்ட பீஸ்ட்! Beast Booking Update

பீஸ்ட் படத்தின் புக்கிங் வசூல்-அதிர்ந்த கர்நாடகா!

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 09-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. இப்படம் தற்போது முன்பதிவு தொடங்கி மிக வேகமாக டிக்கெட் விற்று வருகின்றது.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 09-Apr-2022

வரும் 13 ஆம் தேதி பீஸ்ட் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. படத்தின் புதிய அப்டேட்களை வெளியிடும் போதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிக்க ஆவலுடன் இருப்பதை அவர்களது சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் பீஸ்ட் படம் தமிழகம், கேரளா தாண்டி மற்ற இடங்களில் கேஜிஎப் 2 படம் ரிலிஸாவதால் பெரிய அளவில் வசூலில் அடி வாங்கும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால், பீஸ்ட் படத்தின் முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் நல்ல கலக்சனை பெற்றிருக்கிறதாம்.

குறிப்பாக ராக்கி பாய்யின் கோட்டையான கர்நாடகாவிலேயே முன்பதிவில் 30 லட்சத்தை நெருங்கியுள்ளதாம் என தகவல்கள் தெருவிக்கின்றன. கண்டிப்பாக பெரிய அளவில் வசூல் கர்நாடகாவில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.