நடிகர் வில் ஸ்மித் அவரது கேரியரை இழந்துள்ளார்! 10 வருடம் தடை Will Smith

வில் ஸ்மித் ஆஸ்காரில் நடிகரை அடித்ததற்கு 10 வருட தடை!

Will Smith, Chris Rock, OSCAR Award 09-Apr-2022

2022 ஆம் ஆண்டின் ஆஸ்கார் விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவி பற்றி நகைச்சுவையாக பேசிய கிரிஸ் ராக்கை மேடையில் வைத்து கன்னத்தில் அறைந்தார். இது ஹாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சை ஆனது.

Will Smith, Chris Rock, OSCAR Award 09-Apr-2022

அதனால் தான் ஆஸ்கார் விருது விழாவில் இப்படி நடந்துகொண்டது பற்றி மன்னிப்பு கேட்டிருந்தார் வில் ஸ்மித். ஆனால் தான் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறிய அவர் அகாடமியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதையடுத்து, இனி வில் ஸ்மித் ஆஸ்கார் விருது வாக்கெடுப்பில் வாக்களிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அகாடமியின் டிசிப்ளினரி ரிவியூவ் இன்று நடைபெற்றது. அதில் வில் ஸ்மித் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அதனால் அவருக்கு 10 வருடங்கள் அகாடமியில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்.

Will Smith, Chris Rock, OSCAR Award 09-Apr-2022

10 வருடங்களுக்கு அவர் ஆஸ்கார் விருது விழா மற்றும் அகாடமியின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. வில் ஸ்மித் ஆஸ்கார் மேடையில் மற்றொரு நடிகரை அறைந்தது ஹாலிவுட் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சை ஆனதை தொடர்ந்து அவர் தற்போது நடிக்கும் படங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

ஒருநிமிடம் பொறுமை இழந்த கோபத்தால் வில் ஸ்மித் அவரது கெரியரை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.