லிங்குசாமி படத்தில் சிம்பு-வேற லெவல் அப்டேட் கொடுத்த படக்குழு! Simbu

லிங்குசாமி படத்தில் இணைந்துள்ள சிம்பு

Simbu, STR, The Warriorr, Ram Pothineni, Aadhi, Krithi Shetty, N. Lingusamy, The Warriorr, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate Tamil 08-Apr-2022

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் லிங்குசாமி. இவர் அதிரடியான கதைகளை கொண்ட படங்களையே இயக்கி வருகிறார். அந்தவகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சண்டக்கோழி 2 என்ற படத்தை இயக்கிய லிங்குசாமி அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இயக்கி வரும் திரைப்படம் ‘தி வாரியர்’.

Simbu, STR, The Warriorr, Ram Pothineni, Aadhi, Krithi Shetty, N. Lingusamy, The Warriorr 08-Apr-2022

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தகவல் தெரிவிக்க படுகின்றது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நடிகர் சிம்பு பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலுமே அந்த பாடலை சிம்புவே பாடுகிறாராம். லிங்குசாமி-சிம்பு இருவரும் இணைந்து 2012 ஆம் ஆண்டு வேட்டை படத்தில் பணிபுரிய இருந்தனர். ஆனால் சிம்பு அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.