பிரபல வெற்றிப்பட நாயகியோடு கைகோர்க்கும் லாஸ்லியா! Losliya

பிரபல நடிகையுடன் இணையும் லாஸ்லியா

Losliya, Lijomol Jose, Hari Krishnan, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Losliya Mariyanesan 08-Apr-2022

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. தமிழில் இவர் நடிப்பில் ஏற்கனவே ‘பிரண்ட்ஷிப்’ படம் வெளியாகியிருந்தது. தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ‘அன்னபூர்ணி’ என்ற படத்தில் நடிக்கிறார்.

Losliya, Lijomol Jose, Hari Krishnan 08-Apr-2022

லாஸ்லியாவுடன் ஜெய்பீம் படம் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்த லிஜோமோல் ஜோஸ், நடிக்கிறார். மேலும் இவர்களுடன் மெட்ராஸ், ரைட்டர் படங்களில் நடித்த ஹரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கே.எச்.பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ஓடிஓ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை கே.எச்.பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ஓடிஓ பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்குகிறார்.

Losliya, Lijomol Jose, Hari Krishnan,  08-Apr-2022

மேலும் திரில்லர் டிராமாவாக உருவாகும் ‘அன்னபூர்ணி’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.