சன்னி லியோன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி சன்னி லியோன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்!

Sunny Leone, Vijay Sethupathi 07-Apr-2022

கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘ஓ மை கோஸ்ட்’ என்று பெயர் இடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

Sunny Leone, Vijay Sethupathi 07-Apr-2022

இப்படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே. சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாவேத் ரியாஸ் இசையமைக்கும் இப்படத்துக்கு தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Sunny Leone, Vijay Sethupathi 07-Apr-2022

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.