‘தளபதி 66’ படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு! Thalapathy 66

விஜய்யின் 66 வது படத்தின் பூஜை வீடியோ வைரல்!

Vijay, Prakash Raj, Rashmika Mandanna, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 05-Apr-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாகவும், மற்றும் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vijay, Prakash Raj, Rashmika Mandanna, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 05-Apr-2022

அதையடுத்து விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பாக தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘தளபதி 66’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நேற்று பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

Vijay, Prakash Raj, Rashmika Mandanna, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 05-Apr-2022

பூஜை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ‘தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் தனது யூ டியூபில் பகிர்ந்துள்ளார். விஜய், ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.