விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! ரசிகர்கள் எதிர்பார்ப்பில் Vijay Antony

வெளியான விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

Vijay Antony, Ritika Singh, Radhika Sarathkumar, Kolai 07-Apr-2022

சிறந்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘பிச்சைக்காரன்’ படம் அவரின் சினிமா கேரியரில் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Vijay Antony, Ritika Singh, Radhika Sarathkumar, Kolai 07-Apr-2022

அந்த வகையில் தற்போது கிரைம் திரில்லர் படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ், இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

Vijay Antony, Ritika Singh, Radhika Sarathkumar, Kolai 07-Apr-2022

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மற்றும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், விஜய் ஆண்டனி கறுப்பு நிற உடையில் தலையில் தொப்பியுடன், சிலரின் ஓவியங்களைக் கொண்ட காகிதங்களை கைகளில் வைத்துக்கொண்டிருப்பது போல் இடம்பெற்றுள்ளது. விஜய் ஆண்டனி துப்பறியும் கதாபாத்திரத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.