ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்! காரணம் இது தான் Vijay

இழிவான செயல்களுக்காக ரசிகர்களை எச்சரித்த விஜய்!

Vijay, Thalapathy, Vijay Makkal Iyakkam, Beast 07-Apr-2022

பீஸ்ட் படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென நடிகர் விஜய் நேற்று இரவு தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருகிறார். அதில் அரசியல் தலைவர்கள், அரசு பதவியில் இருப்பவர்களை பற்றி கேலியாக சித்தரித்து மீம் வெளியிடக்கூடாது என கேட்டுக்கொண்டிருந்தார்.

Vijay, Thalapathy, Vijay Makkal Iyakkam, Beast 07-Apr-2022

தொடர்ந்து அவ்வாறான செயல்களை செய்தால் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் மற்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தார்.

இந்த அளவுக்கு கோபமாக விஜய் ஒரு சுற்றறிக்கை அனுப்ப காரணம் ஒரு போட்டோ தான்.

சமீபத்தில் வெளியான பீஸ்ட் பட டிரைலரில் விஜய் காவி நிற பேனரை கிழிப்பது போல காட்சி இருந்தது. அதில் பிரதமர் மோடியின் போட்டோவை வைத்து சிலர் போட்டோஷாப் செய்து வெளியிட்டு உள்ளனர். மோடியின் முகத்தில் விஜய் கத்தி வைத்து கிழிப்பது போல அதில் இருந்தது.

இது பற்றி பாஜகவை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் விஜய், ரசிகர்களை எச்சரித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.