ரஜினியின் 2.0 சாதனையை முறியடித்த விஜயின் பீஸ்ட்! கொல மாஸ் தகவல் Beast

புதிய சாதனையை படைத்த பீஸ்ட்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 07-Apr-2022

அனைத்து சினிமா ரசிகர்களாலும் பெருமளவு எதிர்பார்க்கப்படும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 07-Apr-2022

பீஸ்ட் படத்தை வருகின்ற 13 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் இருந்து ரசிகர்கள் புக்கிங் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். வெளிநாட்டில் படத்திற்கான புக்கிங் முன்பதிவிலேயே ரூபா 90 லட்சத்தை தாண்டி வசூலித்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் புக்கிங் திறந்த உடனேயே அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்துவிடுகிறதாம். கேரளா விஜய்யின் இன்னொரு கோட்டை என்றே கூறலாம். அங்கு ‘பீஸ்ட்’ பட முன்பதிவில் ஒரு சாதனை நடந்துள்ளது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 07-Apr-2022

அதாவது அங்கு உள்ள ஒரு மல்டிப்ளக்ஸில் 41 ஷோக்கள் திரையிடப்பட இருக்கிறதாம், அது முழுவதும் பீஸ்ட் டிக்கெட் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம்.

அங்கு இத்தனை ஷோக்கள் ஒளிபரப்பாவது இதுதான் முதல்முறையாம், ரஜினியின் 2.0 படத்திற்கு கூட இவ்வளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.