ஏ.ஆர். முருகதாஸ்-விக்ரம் கூட்டணியில் இணையும் மற்றுமொரு ஹீரோ! மாஸ் தகவல் Vikram

விக்ரமின் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

Vikram, Vijay Sethupathi, A.R. Murugadoss 06-Apr-2022

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படம் தோல்வி அடைந்ததால் அதன் பின்பு எந்த ஒரு படத்தையும் அவர் தமிழில் இயக்கவில்லை. இவ்வாறிருக்க மீண்டும் தமிழில் வலுவான ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் முருகதாஸ்.

Vikram, Vijay Sethupathi, A.R. Murugadoss 06-Apr-2022

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகனாக சீயான் விக்ரம் உறுதி செய்யப்பட்டுள்ளார் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

Vikram, Vijay Sethupathi, A.R. Murugadoss 06-Apr-2022

அதன்படி, இப்படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.