விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாக அரசு தடை! அதிர்ச்சியில் ரசிகர்கள் Vijay

விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு தடை விதிப்பு

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 05-Apr-2022

மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பின்பு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்ஸுர்ஸ் தயாரித்திருக்கிறது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 05-Apr-2022

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 05-Apr-2022

இந்நிலையில் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள பீஸ்ட் திரைப்படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது. வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தடை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.