பிரபல நடிகையை திருமணம் செய்யும் வினய்!
Vinay, Vimala Raman 05-Apr-2022
ரொமான்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் களமிறங்கிய வினய் தற்போது உக்கிரமான வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். துப்பறிவாளன், டாக்டர் மற்றும் சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் அவரது வில்லன் கதாபாத்திரத்தின் சிறப்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி வில்லனாக வலம் வருகிறார் வினய். இந்நிலையில் வினய்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரபல நடிகை விமலா ராமும் நடிகர் வினய்யும் காதலித்து வருகிறார்களாம்.

மேலும், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாக அந்த தகவலில் தெரிவித்துள்ளது. நடிகை விமலா ராமன் தமிழில் வெளிவந்த ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாளத்திலும் பல படங்களை நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.