மனைவி மீது புகார் அளித்த டி. இமான்
D. Imman 05-Apr-2022
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக புகழ் பெற்றவர் டி.இமான். இவரது இசையமைப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி இருந்தது. அதேசமயம் அவர் பற்றிய இன்னொரு செய்தியும் அண்மையில் வெளியாகி இருந்தது.

டி. இமான் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். ஆனால் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நவம்பர் 2020 ஆல் விவாகரத்து செய்துள்ளார்கள். இதனை டி. இமானே தனது சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மனைவி மீது டி.இமான் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மனைவி குழந்தைகளுக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பதிவு செய்துள்ளார் என புகார் அளித்துள்ளார். தற்போது இமானின் முன்னாள் மனைவி மோனிகாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.