வெளியான ஆர்யாவின் கேப்டன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Captain

கேப்டன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது!

Arya, Simran, Aishwarya Lekshmi, Kavya Shetty, Shakthi Soundar Rajan, Captain 05-Apr-2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பு அவர் நடிப்பில் வெளியான டெடி, சார்ப்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

Arya, Simran, Aishwarya Lekshmi, Kavya Shetty, Shakthi Soundar Rajan 05-Apr-2022

அதனை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யா உட்பட இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

Arya, Simran, Aishwarya Lekshmi, Kavya Shetty, Shakthi Soundar Rajan 05-Apr-2022

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த பர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.