Raiza Wilson 4th Apr 2022
Raiza Wilson, Fashion, Model, Bigg Boss Tamil 4th Apr 2022 : ரைசா வில்சன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை. அவர் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராகப் பங்குபற்றினார், பின்னர் அவர் அவரது பிக் பாஸ் சீசன் 1 இணை போட்டியாளர் மற்றும் இரண்டாவது ரன்னர் அப் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் திரையுலகுக்கு அறிமுகமானார்.
பாலாவின் வர்மாவில் துருவ் விக்ரமுடன் நடித்திருந்தார். விஷ்ணு விஷால், கௌதம் வாசுதேவ் மேனன், ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன் ஆகியோருடன் அவர் நடித்துள்ள FIR திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாகியது. தி சேஸ், ஆலிஸ், லவ், காதலிக்க யாருமில்லை, பொய்க்கால் குதிரை போன்ற பல படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.
ரைசாவை ட்விட்டரில் 400,000 பின்தொடர்பவர்களும், இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பின்தொடர்பவர்களும், முக புத்தகத்தில் 550,000 பின்தொடர்பவர்களும் உள்ளனர். தற்போது அவரது படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.