தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகனாகும் சிவகார்த்திகேயன்!
Rajinikanth, Sivakarthikeyan, Aishwarya Rai, Nelson DilipKumar, Thalaivar 169 04-Apr-2022
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கம் பெயரிடப்படாத தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், தலைவர் 169 என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசையை இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் பூர்த்தி செய்யவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.