பீஸ்ட் படத்திற்க்கு பதிலாக கேரளாவில் வரவேற்க படும் படம்!
Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 04-Apr-2022
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பதுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் ஒரு படத்தை தயாரிக்கிறது என்று சொன்னாலே அப்படத்தின் புரொமோஷன் வேலைகளை பெரிய அளவில் செய்வார்கள். அப்படி அவர்கள் தயாரித்திருக்கும் ஒரு பெரிய நடிகரின் படம் தான் விஜய்யின் பீஸ்ட்.
ஒரு பெரிய தீவிரவாதிகள் கும்பலிடம் இருந்து மக்களை பத்திரமாக காப்பாற்றி எப்படி வெளியேறுகிறார் ஹீரோ என்பது தான் கதையாக இருக்கிறது. இதில் விஜய் எப்படிபட்ட நடிப்பை வெளிக்காட்ட இருக்கிறார் என்றும் இப்படம் எவ்வளவு மாஸாக இருக்கப்போகிறது என்பது பற்றியும் பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகி இருந்த நிலையில், ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி வருகிறார்கள். பீஸ்ட் டிரைலர் மேலும் எதிர் மறையான கருத்துக்கள் மற்றும் கேள்விகளிடையே பல சாதனைகளை படைத்து வருகிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருக்கிறது, இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் மிக வேகமாக நடந்து வருகின்றன. அதேசமயம் கன்னட சினிமாவில் தயாராகி பல மொழி மக்களால் பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்ட கேஜிஎப் படத்தின் 2 ஆம் பாகமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விஜய்யின் போர்ட், கேரளா என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் இப்போது அங்கு விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வரவேற்பு இல்லையாம், அதற்கு பதிலாக யாஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.