பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் தியேட்டர் சூரையாடப்பட்டது! Beast Vijay

பீஸ்ட் பட டிரைலர் வெளியான நிலையில் திரையரங்கை சூரையாடிய ரசிகர்கள்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 04-Apr-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் கடந்த 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 04-Apr-2022

மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பின்பு விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்ஸுர்ஸ் தயாரித்திருக்கிறது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 04-Apr-2022

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி இணையத்தில் இப்படத்தின் அரபிக் குத்து பாடல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 04-Apr-2022

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரைலரை படக்குழுவினர் கடந்த 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளனர். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர், அன்று சில திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்ட பொழுது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கைகள் மேல் ஏறி அவர்களுடைய ஆரவாரமான சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அப்போது தியேட்டர்களின் இருக்கைகளை ரசிகர்கள் சிலரால் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.