வெறித்தனமாக வெளியாகியுள்ள விஜய்யின் பீஸ்ட் ட்ரைலர்!
Vijay, Pooja Hegde, Selvaraghavan, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 02-Apr-2022
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பதுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தனர். அதன்படி பீஸ்ட் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று பீஸ்ட் படத்தின் ட்ரைலர் கொல மாஸாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.