2.0 வசூலை முறியடித்து சாதனை செய்யும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்! உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? RRR Box Office Collection

சூப்பர் ஸ்டார் படத்தை பின்னுக்கு தள்ளிய ஆர் ஆர் ஆர் படம்!

Ram Charan, N. T. Rama Rao Jr., Alia Bhatt, Olivia Morris, Shriya Saran, S. S. Rajamouli, M. M. Keeravani, Rajinikanth, RRR 02-Apr-2022

தெலுங்கு சினிமாவில் மிக பெரிய அளவில் உச்சம் தொட்டவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. உலக மக்கள் கவனத்தில் கொள்ளும் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வருபவர் ஆவர். அவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி படங்கள் எல்லாம் பெரிய அளவில் மக்களை சென்றடைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Ram Charan, N. T. Rama Rao Jr., Alia Bhatt, Olivia Morris, Shriya Saran, S. S. Rajamouli, M. M. Keeravani, RRR 02-Apr-2022

ஆகவே இயக்குனர் ராஜமௌலி மீது மக்கள் மிக பெரிய நம்பிக்கை வைத்தார்கள், அவர் படம் என்றால் பிரமாண்டம் மட்டுமின்றி கண்டிப்பாக சிறந்த கதைக்களத்துடன் கூடிய திரைக்கதையாக இருக்கும் என எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இப்போது அதிக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேலாக வசூலித்திருக்கிறது. அதோடு உலகம் முழுவதும் இதுவரையிலான வசூல் ரூ. 751 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.

Ram Charan, N. T. Rama Rao Jr., Alia Bhatt, Olivia Morris, Shriya Saran, S. S. Rajamouli, M. M. Keeravani, Rajinikanth, RRR 02-Apr-2022

பாகுபலி பட மொத்த வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர் தற்போது 2.0 படத்தின் மொத்த வசூல் சாதனையையும் முறிடியத்துள்ளது. 2.0 படம் ரூ. 650 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.