அரபிக் குத்து பாடலுக்கு செம குத்து போட்ட கிரண் ரதோட்!
Kiran Rathod 02-Apr-2022
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பதுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். டிரைலரில் விஜயின் லுக் பக்கா மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர் மத்தியிலும் இணையத்தின் மத்தியிலும் சாதனை படைத்துள்ளது.
மேலும் நடிகை சமந்தா முதல் பாலிவுட் நாயகிகள் ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் மற்றும் ரகுல் ப்ரீத் என பலர் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்டுவிட்டனர். தற்போது அவர்களின் லிஸ்டில் பிரபல நாயகி கிரணும் இடம்பெற்றுள்ளார். தற்போது அவர் அரபிக் குத்து பாடலுக்கு போட்ட குத்தாட்டம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.