மீண்டும் கமலின் மருதநாயகம்-எதிர்பாரத திருப்பத்தை செய்யும் கமல்! Marudhanayagam

மருதநாயகம் படத்தை கையில் எடுத்த கமல்!

Kamal Haasan, Ilaiyaraaja 02-Apr-2022

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக யொலிப்பவர் கமல்ஹாசன். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தை நடித்து முடித்துள்ளார். மிக பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Kamal Haasan, Ilaiyaraaja 02-Apr-2022

மேலும் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக பல படங்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படமும் முடிவின்றி இருக்கிறது.

இந்நிலையில் கமல் தனது கனவு படமான ‘மருதநாயகம்’ படத்தை கையில் எடுக்க இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த கதையில் கமல் நடிக்கவில்லை, வேறொரு ஹீரோவை வைத்து படம் எடுக்க கமல் பரிசீலனையில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது. தயாரிப்புக்காக ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துடன் கமல் பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.