ஹிட் கொடுத்த இயக்குனர் படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோவுடன் இணையும் தனுஷ்! Dhanush

தனுஷ் தெலுங்கு ஹீரோவுடன் இணையும் புதிய படத்தின் தகவல்!

Dhanush, Allu Arjun, Boyapati Srinu 02-Apr-2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மற்றும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுறு இயக்கத்தில் வாத்தி, மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துக் கொண்டுள்ளார்.

Dhanush, Allu Arjun, Boyapati Srinu 02-Apr-2022

இந்நிலையில் தனுஷ் அடுத்து மேலும் தெலுங்கு இயக்குனர் ஒருவருடன் கூட்டணி சேர்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. பாலய்யா நடித்த ‘அகாண்டா’ என்ற படத்தை இயக்கிய போயபடி ஸ்ரீனு தான் அந்த இயக்குனர்.

இந்நிலையில் ‘அகாண்டா’ மிக பெரிய வெற்றி பெற்றதால் பல முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களாம். அந்த வகையில் அவ் இயக்குனரின் அடுத்த படத்தில் தான் தனுஷ் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது பற்றி எவ்வித அதிகார பூர்வமான அறிவிப்பும் அறிவிக்க படவில்லை. விரைவில் தனுஷ், அல்லு அர்ஜுன், மற்றும் போயபடி ஸ்ரீனு இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.