கார்த்திக் சுப்பராஜ்-முத்தையா-விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய படம்! Tamil Cinema News

விஷால் நடிக்க இருக்கும் புதிய படத்தின் தகவல்!

Vishal, Karthik Subbaraj, M. Muthaiah, Tamil Cinema News 01-Apr-2022

வீரமே வாகை சூடும் படத்தின் வெற்றிக்கு பின் விஷால் நடிக்க இருக்கும் அவரின் 34 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஷால் நடித்த வீரமே வாகை சூடும் படம் கடந்த பெப்ரவரி மாதம் வெளியானது.

Vishal, Karthik Subbaraj, M. Muthaiah 01-Apr-2022

தற்போது விஷாலிடம் லத்தி, துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது . இது போலீஸ் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மற்றும் துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகியதால் விஷாலே அந்த படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து நடிக்க உள்ள ‘மார்க் ஆண்டனி’ விஷாலுக்கு 33 வது படமாக அமைகிறது.

Vishal, Karthik Subbaraj, M. Muthaiah 01-Apr-2022

இந்நிலையில், விஷால் நடிக்க உள்ள 34 வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை முத்தையா இயக்க இருப்பதாகவும், கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷால் நடித்து 2016 இல் வெளியான மருது படத்தை முத்தையா இயக்கி இருந்தார். 6 வருடங்களுக்கு பின் மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இது சண்டை காட்சிகள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.