விஜய் கலந்துகொள்ளும் சன் டிவி நிகழ்ச்சி! ஷாக் ஆனா தொகுப்பாளர் விபரம் Vijay

விஜய் கலந்து கொள்ளும் சன் டிவி நிகழ்ச்சியில் பிரபலம் ஒருவர் தொகுப்பாளர் ஆகிறார்!

Vijay, Nelson Dilipkumar, Thalapathy 01-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Vijay, Nelson Dilipkumar, Thalapathy 01-Apr-2022

இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

பீஸ்ட் படத்திற்காக கடந்த 9 ஆண்டுகளின் பின்பு, மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் நடிகர் விஜய். சன் டிவி ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.

Vijay, Nelson Dilipkumar, Thalapathy 01-Apr-2022

மேலும், இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ஒளிபரப்பு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குறித்து ஷாக் ஆனா தகவல் வெளியாகியுள்ளது.

Vijay, Nelson Dilipkumar, Thalapathy 01-Apr-2022

அதாவது, தளபதி விஜய் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தானாம். விஜய் மற்றும் நெல்சனின் கலகலப்பான கலந்துரையாடல் தான் இந்த நிகழ்ச்சி என்று தகவல் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நிகழ்விற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.