‘வலிமை’ எனக்கு முழு திருப்தி தரவில்லை – வெங்கட் பிரபு விமர்சனம்! Ajith Kumar

வலிமை படம் பற்றி வெங்கட் பிரபு தெரிவித்த நேர்மையான கருத்து!

Venkat Prabhu, Ajith Kumar, H. Vinoth 01-Apr-2022

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 34 கோடி வரை வசூல் செய்து, சர்கார் படத்தின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

Venkat Prabhu, Ajith Kumar, H. Vinoth 01-Apr-2022

மேலும், உலகளவில் மொத்தம் ரூ. 200 கோடி வரை வசூல் செய்து, அஜித்தின் வலிமை சாதனை செய்துள்ளது. இந்நிலையில், வலிமை படம் குறித்து முதன் முறையாக தனது நேர்மையான விமர்சனத்தை இயக்குனர் வெங்கட் பிரபு முன்வைத்துள்ளார்.

Venkat Prabhu, Ajith Kumar, H. Vinoth 01-Apr-2022

அதில் ” வலிமை படம் நன்றாக இருந்தது. ஸ்டண்ட்ஸ் எல்லாம் சூப்பராக இருந்தது. ஆனால், நான் அதிகம் எதிர்பார்த்திருந்ததால், படம் முழு திருப்த்தியை எனக்கு தரவில்லை. எச். வினோத்தின் டீடைலிங் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால், எதோ ஒரு இடத்தில், எனக்கு வலிமை படம் முழு திருப்த்தியை தரவில்லை ” என்று நேர்மையாக கருத்து வெளியிட்டுள்ளார்.