விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் செம மஸான தகவல்!
Vikram, Pa. Ranjith, Chiyaan 61 31-Mar-2022
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விக்ரம். சமீபத்தில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியான ‘மகான்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

மேலும் தற்போது சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். இப்படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படமாக இருக்கும் என்றும் பாரம்பரிய ‘உடற்கட்டமைப்பு’ குறித்த திரைப்படமாக இருக்கும் என்றும் தகவல் வெளிவந்தன.
அதுமட்டுமின்றி அப்படத்தின் டைட்டில் ‘மைதானம்’ என இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விக்ரமின் பிறந்தநாள் தினத்தன்று வெளியாகும் என்றும் கூறபடுகிறது.