‘நீலம் புரொடக்சன்ஸ்’ வழங்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Dinesh Ravi, Urvashi, Pa. Ranjith, Suresh Mari, J Baby 30-Mar-2022
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பா.ரஞ்சித். இவர் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’ போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கலையரசன் நடிப்பில் வெளிவந்த ‘குதிரைவால்’ படத்தை தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘நீலம்’ தயாரிப்பின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். டோனி பிரிட்டோ என்பவர் இசையமைக்கிறார். ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு ‘J.பேபி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டள்ளது.

இது குறித்த போஸ்டர் ஒன்றை பா. ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அப்போஸ்டரில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, லொள்ளு சபா மாறன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
மேலும் அந்த பதிவில், “வாழ்த்துகள் சுரேஷ் மாரி அண்ணா, நீங்கள் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் எதிர்பார்க்காத அன்பை, நாம் உருவாக்கியுள்ள ‘J.பேபி’ படத்திலும் காண கிடைத்தது. உங்கள் திரையுலக வாழ்க்கை சிறக்கட்டும். இப்படம் உருவாக்க உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.