தோல்வியில் சோர்வுற்றிருக்கும் இயக்குனருக்கு கைகொடுத்த சியான் விக்ரம்! Vikram

சியான் விக்ரம் படத்தை முதல் தடவையாக இயக்கும் இயக்குனர்!

Vikram, A.R. Murugadoss, Anirudh 30-Mar-2022

சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘மகான்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விக்ரம் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

Vikram, A.R. Murugadoss, Anirudh 30-Mar-2022

விக்ரமின் துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் தற்போது சியான் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சியான் 62 திரைப்படத்தை கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார்.

நடிகர் விக்ரம் நடித்த ‘பத்து என்றதுக்குள்ள’ திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த நிலையில் தற்போது முதன்முறையாக விக்ரமை வைத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதற்கு முன்வந்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

Vikram, A.R. Murugadoss, Anirudh 30-Mar-2022

மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் முதல் முறையாக விக்ரம் இணைந்துள்ளார். முருகதாஸ் இயக்க இருக்கும் பெயரிடப்படாத சியான் 62 எனும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார்.

விக்ரம், அனிரூத், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் ஏஆர்.முருகதாஸ் இந்த பட வாய்ப்பை இருக்கமாக பிடித்துக் கொண்டால் சினிமாவில் அடுத்த நிலைக்கு சென்று விடலாம். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடேசியாக வந்த படங்களில் தனக்கு ஏற்பட்ட சில எதிர் மறையான கருத்துக்களை சியான் 62 படம் மூலம் நிவர்த்தி செய்வாரா என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.