மாரிசெல்வராஜ் கொடுத்த அசத்தலான தகவல்! Maamannan

மாரி செல்வராஜ் படத்தின் புதிய அப்டேட்!

Udhayanidhi Stalin, Fahadh Faasil, Keerthy Suresh, Vadivelu, Mari Selvaraj, Maamannan 30-Mar-2022

கர்ணன் பட வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம்வருகிறார் மாரி செல்வராஜ். அடுத்து இவர் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் உதயநிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Udhayanidhi Stalin, Fahadh Faasil, Keerthy Suresh, Vadivelu, Mari Selvaraj, Maamannan 30-Mar-2022

மற்றும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது.

சமீபத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வடிவேலு வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டியுள்ளனர். அதனை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.