24 மணி நேரத்தில் கே.ஜி.எப் 2 டிரைலர் படைத்த மாபெரும் சாதனை! KGF Yash

கே.ஜி.எப் 2 படத்தின் டிரைலர் படைத்துள்ள சாதனை!

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Prakash Raj, Malavika Avinash, Saran Shakthi, Prashanth, Raveena Tandon, Prashanth Neel, K.G.F: Chapter 2, KGF 2 29-Mar-2022

கன்னட சினிமாவை இந்தியா சினிமாவே திரும்பி பார்க்க வைத்த படம் ‘கேஜிஎப்’ என்று சொன்னால் அது மிகையாகாது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட மற்றும் பலர் நடித்திருந்தனர். கர்நாடகாவின் அடையாளங்களில் ஒன்றான கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த திரைப்படம் பல மொழிகளில் ரிலீஸாகி ஹிட்டானது.

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Prakash Raj, Malavika Avinash, Saran Shakthi, Prashanth, Raveena Tandon, Prashanth Neel, K.G.F: Chapter 2, KGF 2 29-Mar-2022

தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று நாடளாவிய ரீதியில் சக்கைப்போடு போட்டு கலக்கியது. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியால் இப்போது பெருமளவில் பிரம்மாண்டமாக கேஜிஎப் 2 உருவாகியுள்ளது. இந்த படத்தில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டரகள் அன்பறிவ் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Prakash Raj, Malavika Avinash, Saran Shakthi, Prashanth, Raveena Tandon, Prashanth Neel, K.G.F: Chapter 2, KGF 2 29-Mar-2022

முதல் பாகத்தில் இல்லாத சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான TOOFAN என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாகி அதுவும் கவனத்தை ஈர்த்தது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎப்-2 டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது.

Yash, Srinidhi Shetty, Sanjay Dutt, Prakash Raj, Malavika Avinash, Saran Shakthi, Prashanth, Raveena Tandon, Prashanth Neel, K.G.F: Chapter 2, KGF 2 29-Mar-2022

இந்நிலையில் கேஜிஎப்-2 டிரைலர் இதுவரை எந்தவொரு இந்திய படமும் படைக்காத சாதனையை நிகழ்த்தியுள்ளது. வெளியான 24 மணிநேரத்திலேயே 109 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது சம்மந்தமாக விவரத்தை வெளியிட்டுள்ள ஹோம்பலே பிலிம்ஸ் ‘கன்னடம் -18 மில்லியன், தெலுங்கு – 20 மில்லியன், இந்தி -51 மில்லியன், தமிழ் -12 மில்லியன், மலையாளம் – 8 மில்லியன்’ எனத் தெரிவித்துள்ளது. மேலும் டிரைலரில் ராக்கி பேசும் வசனத்தை போல ‘ரெக்கார்ட்ஸ்… ரெக்கார்ட்ஸ்… ரெக்கார்ட்ஸ்…. ராக்கிக்கு ரெக்கார்ட்ஸ் பிடிக்காது. ஆனா ரெக்கார்ட்ஸுக்கு ராக்கியைப் பிடிக்கும். அதை அவனால் தடுக்க முடியாது’ எனக் கூறியுள்ளனர்.