மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா – பூரி ஜெகன்நாத் கூட்டணி! அடுத்த மிஷன் ரெடி Vijay Deverakonda

விஜய் தேவரகொண்டா – பூரி ஜெகன்நாத் மீண்டும் இணையும் படம் பற்றிய தகவல்!

Vijay Deverakonda, Ananya Panday, Mike Tyson, Ramya Krishnan, Puri Jagannadh, Tanishk Bagchi, Mani Sharma, Liger 29-Mar-2022

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘லைகர்’ படத்தைத் தயாரிக்கிறது.

Vijay Deverakonda, Ananya Panday, Mike Tyson, Ramya Krishnan, Puri Jagannadh, Tanishk Bagchi, Mani Sharma, Liger 29-Mar-2022

இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Vijay Deverakonda, Ananya Panday, Mike Tyson, Ramya Krishnan, Puri Jagannadh, Tanishk Bagchi, Mani Sharma, Liger 29-Mar-2022

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா – பூரி ஜெகநாத் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். இதுகுறித்து அறிவிப்பை படக்குழு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. அதில், “14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E – அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் படக்குழு சொல்ல வருவது என்னவென்றால், இன்று படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகும் என்பதே ஆகும்.