சூர்யா படத்தில் தமிழில் அறிமுகமாகும் பிரபல நடிகை! Suriya 41

தமிழில் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் நடிகை!

Suriya, Bala, Krithi Shetty, Suriya 41, G. V. Prakash Kumar 28-Mar-2022

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘பிதாமகன்’ மற்றும் ‘நந்தா’ ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக சூர்யா-பாலா இணையும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Suriya, Bala, Krithi Shetty, Suriya 41, G. V. Prakash Kumar 28-Mar-2022

மற்றும் தற்காலிகமாக ‘சூர்யா 41’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ‘க்ரித்தி ஷெட்டி’ நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை படக்குழு உறுதி செய்துள்ளது. நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கில் ஹிட்டடித்த ‘உப்பென்னா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya, Bala, Krithi Shetty, Suriya 41, G. V. Prakash Kumar 28-Mar-2022

அறிமுகமான முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்ற க்ரித்தி ஷெட்டி நானியுடன் ‘ஷ்யாம் சிங்க ராய்’ படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சூர்யா 41 படத்தில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya, Bala, Krithi Shetty, Suriya 41, G. V. Prakash Kumar 28-Mar-2022