ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் குறித்து தமிழில் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா! Moopilla Thamizhe Thaaye

ட்ரெண்டிங்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல்

AR Rahman, Anand Mahindra, Moopilla Thamizhe Thaaye 28-Mar-2022

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த வெள்ளிக்கிழமை மாஜா யூ ட்யூப் தளத்தில் வெளியான பாடல் ‘மூப்பில்லா தமிழே தாயே’. கடந்த மார்ச் 24 ஆம் தேதி துபாய் எக்ஸ்போவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இப்பாடல் முதன் முதலில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது யூட்டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

AR Rahman, Moopilla Thamizhe Thaaye

‘புயல் தாண்டியே விடியல்…’ என்ற வரியில் தொடங்கி தமிழருடைய கலாச்சாரம், தொன்மை மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்துள்ள தமிழர்களின் வாழ்வியலை கொண்டாடும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ், ரக்‌ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார், நகுல் அய்யங்கர் மற்றும் பூவையார் ஆகியோர் பாடியுள்ளனர். தாமரை வரிகளை எழுதியுள்ளார். மட்டும் இப்பாடலை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று யூ டியூபில் 1.8 மில்லியன் பார்வையாளர்களிற்கு மேல் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்நிலையில், ஆனந்த் மஹிந்திராவுடைய ட்வீட் தமிழில் அமைந்திருந்தது தான் மிகப் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவருடைய பதிவில், “இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ” என ரஹ்மானைக் குறிப்பிட்டு ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார்.

AR Rahman, Anand Mahindra, Moopilla Thamizhe Thaaye 28-Mar-2022

இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் தலைவர் தமிழில் ட்வீட் செய்துள்ளது பற்றி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, பொங்கலின் போதும், தமிழ் மொழி குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருந்தார். மற்றும் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய பள்ளிப் படிப்பை தமிழ்நாட்டில் முடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.