ராஷ்மிகாவின் இறுக்கமான ABS வயிற்று தசையுடன் வைரலாகும் புகைப்படம்! Rashmika Mandanna

ராஷ்மிகாவின் புதிய தோற்றத்துடன் கூடிய புகைப்படம் வைரல்!

Rashmika Mandanna, Vijay, Thalapathy 66 26-Mar-2022

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் ‘கிரீக் பார்ட்டி’ படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் “சலோ” படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படம் அவரை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்த படமாக அமைந்தது.

Rashmika Mandanna, Vijay, Thalapathy 66 26-Mar-2022

தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் அனைவரையும் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தேடிக்கொண்டவர் ராஷ்மிகா மந்தனா.

மேலும் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66-ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல்கள் தெருவிக்கின்றன. இப்படத்தில் விஜயுடன் பிரகாஷ் ராஜ் இணைகிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றும் தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் காட்சிக்கு மிகப்பெரிய செட்டில் விஜய் & ரஷ்மிகா மந்தனா நடனத்துடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

Rashmika Mandanna, Vijay, Thalapathy 66 26-Mar-2022

இந்நிலையில் நடிகை ராஸ்மிகா தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், “இந்தப் படத்தை வெளியிட எனக்கு அனுமதி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.., உங்களில் பலருக்கு இது பிடிக்காது.. ஆனால் உங்கள் உடற்பயிற்சி இலக்குகளுக்கான திறவுகோல் என்று சொல்ல இந்தக் புகைப்படத்தை இடுகையிடுகிறேன்.

நிலைத்தன்மை.. உடற்பயிற்சிகளுடன், பிசியோவுடன், உங்கள் உணவுமுறைகளுடன், உங்கள் எண்ணங்களுடன், உங்கள் பயணத்துடன்.. சீராக இருங்கள்.. சிறிது நேரம் வேடிக்கையாக இருக்காது, ஆனால் நீங்கள் பழகும் போது.. நீங்கள் உணருங்கள்..என் அன்பை அனுப்புகிறேன்!” என கூறியுள்ளார்.


Posted

in

by