தனுஷ் படத்தின் போஸ்டருடன் கூடிய புதிய தகவல்!
Dhanush, Selvaraghavan, Yuvan Shankar Raja, Naane Varuven 26-Mar-2022
‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவர்கள் இருவரும் தற்போது ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். செல்வராகவன் இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், நடித்தும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் செல்வராகவன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் நானே வருவேன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் வாயில் சிகரெட்டுடன் ஸ்டைலாக அமர்ந்துள்ள தனுஷின் இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பில் ! #naanevaruven
— selvaraghavan (@selvaraghavan) March 25, 2022
@theVcreations
@dhanushkraja
@thisisysr
@omdop pic.twitter.com/OFgedM9qFK