RRR Movie Review 25th Mar 2022
N.T.Rama Rao Jr., Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, RRR, S.S.Rajamouli 25th Mar 2022 : இந்தியாவின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வரும் வேளையில், ஆங்கிலேயர்கள் படையில் போலீஸ் அதிகாரியாக ராம் சரண் இருக்கிறார். அந்நேரம் பழங்குடியின சிறுமி ஒருத்தியை ஆங்கிலேயர்கள் அரண்மனைக்கு அழைத்து வருகின்றனர். அச்சிறுமியை மீட்பதற்காக பழங்குடியினரில் ஜூனியர் என்டிஆர் திட்டம் வகுக்கிறார். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் இந்நிலையில், சிறுமியை மீட்க வரும் ஜூனியர் என்டிஆரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரி பதவி கிடைக்கும் என்று அறிவிக்கிறார்கள். ஜூனியர் என்டிஆரை கண்டுபிடிக்கும் பணியில் களமிறங்குகிறார் ராம் சரண். எதிர்பாராதவிதமாக ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் நண்பர்களாகிறார்கள். இறுதியில் ஜூனியர் என்டிஆர் ஆங்கிலேயர்களிடமிருந்து சிறுமியை காப்பாற்றினாரா? ராம் சரண் ஜூனியர் என்டிஆரை பிடித்தாரா? இவர்களிருவருக்குமிடையேயான நட்பு என்னானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

பழங்குடியினர் பாத்திரத்திற்கு ஜூனியர் என்டிஆர் மிகவும் தத்துரூபமாக நடித்திருக்கிறார். கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடிபில் தூள் கிளப்புகிறார் ராம் சரண். ராம் சரண் ஜூனியர் என்டிஆர் இருவரும் நடிப்பில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அஜய் தேவ்கன் போராளியாக பார்வையாளர்களை உறைய வைக்கிறார். ஆலியா பட், ராம் சரணின் காதலியாக வந்து போகிறார். வழமை போலவே அசத்துகிறார் சமுத்திரக்கனி.
பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்திற்கு எற்றாற் போல் பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் கொடுத்து தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.
ராஜமவுலி கதாபாத்திரங்களிடையே திறமையாக நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார். சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது. படத்தின் நீளம் சற்று கூடியது போலத் தோன்றுகின்றது. ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் பாடல்கள் அமர்க்களம். செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் காட்டும் பிரம்மாண்டம் ரசிக்க வைக்கிறது.