விஜய் சேதுபதியுடன் போட்டியிடும் சிம்பு படம்!
Vijay Sethupathi, Simbu, Hansika Motwani, Nayanthara, Samantha, Vignesh Shivan, Anirudh Ravichander, Kaathu Vaakula Rendu Kadhal, Maha 25-Mar-2022
இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா ‘மகா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்க, ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது நடிகை ஹன்சிகாவின் 50வது படமாகும். எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டே இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ‘மகா’ படத்தின் வெளியீடு தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அதன்படி, ‘மகா’ திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் அதே ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.