சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் பேசிய தகவல்!
Vetrimaaran, Soori, Suriya, Vaadivaasal, Viduthalai 25-Mar-2022
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் ‘அசுரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூரி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளாவின் 26 வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறனின் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், “தமிழ் சினிமா தற்போது திராவிட அரசியலின் கொள்கைகளை முன்னிறுத்தி வருகிறது. புதிய படங்கள் திராவிட அரசியலின் லட்சியங்களுக்கு வலு சேர்க்கிறது. சமூக எதார்த்தங்களும், அரசியல் சூழ்நிலைகளும் இந்த மாதிரியான திரைப்படங்களுக்கு வழி வகுக்கின்றன. இன்றைய உலகம் பிளவுபட்டுள்ளது. ஒன்று நீங்கள் வலது சாரியாக இருக்க வேண்டும் அல்லது இடது சாரியாக இருக்க வேண்டும். மையம் என்று ஒன்று இல்லை. மையத்தை தேர்ந்தெடுத்தால் நீங்களும் வலது சாரியே. ஆனால் உங்களுக்கான பாதையை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.