“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படம் தமிழில் வெளியாக இருக்கிறது! The Kashmir Files

தமிழில் வெளியாகும் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படம்!

Vivek Agnihotri, Pallavi Joshi, Darshan Kumar, The Kashmir Files 25-Mar-2022

தி காஷ்மீர் ஃபைல்ஸ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அண்மையில் திரையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருவதுடன் வசூலையும் அள்ளிக் குவித்திருக்கிறது.

Vivek Agnihotri, Pallavi Joshi, Darshan Kumar, The Kashmir Files 25-Mar-2022

காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அண்மையில் திரையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

Vivek Agnihotri, Pallavi Joshi, Darshan Kumar, The Kashmir Files 25-Mar-2022

இந்த திரைப்படம் வெளியாகிய முதல் 6 தினங்களில் இந்தியாவில் மட்டும் 80 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் தற்போது 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை தமிழ், தெலுங்கு கண்ணடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளன. இதனால் படத்தினை டப்பிங் செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Posted

in

by