விஜய்-அஜித் படங்களில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் மரணம்!
Vijay, Ajith, Sarath Kumar, Govindaraj 25-Mar-2022
விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ மற்றும் ‘காதலுக்கு மரியாதை’, அஜித்தின் ‘நீ வருவாய் என’ மற்றும் சரத்குமாரின் ‘சூர்யவம்சம்’ உள்ளிட்ட 65 படங்களுக்கு மேல் ஆடை வடிவமைப்பாளராக திரைத்துறையில் பணியாற்றியவர் கோவிந்தராஜ்.

தனது அயராது உழைப்பாலும், சிறந்த படைப்பாற்றலாலும் திரைத்துறையில் உச்சம் தொட்டவர். இந்த நிலையில், கோவிந்தராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவரது வயது 82.
‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிப்பில் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். விக்ரமன்,கே.எஸ் ரவிக்குமார், ராஜகுமாரன் போன்ற இயக்குநர்களுக்கு ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

மற்றும் ராமராஜன், கனகா, சங்கீதா உள்ளிட்ட பல நடிகர்களுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்தராஜ் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.