“2026 முதல்வர் வேட்பாளர் விஜய்” பரபரப்பை ஏற்படுத்திய மக்கள் இயக்க போஸ்டர்! Vijay Makkal Iyakkam

“2026 முதல்வர் வேட்பாளர் விஜய்” வெளியான போஸ்டர்

Vijay, Makkal Iyakkam, Ilayathalapathy Vijay Makkal Iyakkam, Thalapathy, Beast 24-Mar-2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனது திறமையான நடிப்பால் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருகிறார்.

Vijay, Makkal Iyakkam, Ilayathalapathy Vijay Makkal Iyakkam, Thalapathy 24-Mar-2022

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்த்த பலரும் போட்டியிட்டனர். இதில் சிலர் வெற்றியையும் பெற்றனர். நடிகர் விஜய் வருங்காலங்களில் அரசியலில் களமிறங்குவார் எனப் பலரும் கூறிவருகின்றனர். அதற்கான ஒத்திகையாகத்தான் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கத்தினரை தேர்தலில் போட்டியிட வைத்ததாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

இதனிடையே அவ்வப்போது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Vijay, Makkal Iyakkam, Ilayathalapathy Vijay Makkal Iyakkam, Thalapathy, Beast 24-Mar-2022

அந்த போஸ்ட்டரில் முடிவு எடுத்தால் முதல்வர்தான், என்று குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் 2026 ல் விஜய் மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்று அவரது புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகளை கிளப்பியுள்ளது.