விக்ரமுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி! வெற்றிப்பட இயக்குநரின் அடுத்த படைப்பு

விக்ரம்-விஜய் சேதுபதி இணையும் படம் பற்றிய தகவல்!

Vikram, Vijay Sethupathi, M. Manikandan, Cobra, Ponniyin Selvan, Mani Ratnam, A. R. Rahman 24-Mar-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் சீயான் விக்ரம், அவரின் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்து விரைவில் கோப்ரா படத்தை திரையிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார்.

Vikram, Vijay Sethupathi, M. Manikandan, Cobra, Ponniyin Selvan, Mani Ratnam, A. R. Rahman 24-Mar-2022

‘காக்க முட்டை’ படம் மூலம் இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமான மணிகண்டன், ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ,’கடைசி விவசாயி’ என யதார்த்தமான படங்களை இயக்கி பிரபலமானார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தோடு, திரை விமர்சகர்களாலும் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.

Vikram, Vijay Sethupathi, M. Manikandan, Cobra, Ponniyin Selvan, Mani Ratnam, A. R. Rahman 24-Mar-2022

இந்நிலையில், மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரமும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.