நடிகர் சிம்பு கார் மோதியதில் முதியவர் பலி! போலீஸ் விசாரணை Simbu

சிம்பு கார் மோதி முதியவர் பலி

Silambarasan TR, Simbu, Vendhu Thanindhathu Kaadu, Bigg Boss Ultimate 24-Mar-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Silambarasan TR, Simbu, Vendhu Thanindhathu Kaadu, Bigg Boss Ultimate 24-Mar-2022

சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கடந்த 18 ஆம் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Silambarasan TR, Simbu, Vendhu Thanindhathu Kaadu, Bigg Boss Ultimate 24-Mar-2022

அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த முதியவர், தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி. ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அந்நிலையில் அந்த காரை ஓட்டி சென்ற, தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.