விஜய் சேதுபதி படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிப்பு! Maamanithan

வெளியான விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி!

Vijay Sethupathi, Gayathri, Anikha Surendran, Maamanithan 23-Mar-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். எடுத்துக்கொள்ளும் அனைத்து கதாப்பாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

Vijay Sethupathi, Gayathri, Anikha Surendran, Maamanithan 23-Mar-2022

தர்மதுரை திரைப்படத்திற்குப் பின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். மேலும் எம்.சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi, Gayathri, Anikha Surendran, Maamanithan 23-Mar-2022

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர் .அதன்படி மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.