நயன்தாரா-பிருத்விராஜ் இணைந்துள்ள பிரேமம் இயக்குனரின் ‘கோல்ட்’ படம்! மாஸான தகவல் Gold

நயன்தாரா-பிருத்விராஜ் நடிக்கும் ‘கோல்ட்’ படம் பற்றிய தகவல்!

Prithviraj, Nayanthara, Alphonse Puthren, Gold 23-Mar-2022

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடித்துள்ள கோல்ட் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுவருகிறது. தமிழ் சினிமாவில் குறும்பட உலகில் இருந்து வந்து கவனம் ஈர்த்தவர்களில் அல்போன்ஸ் புத்ரன் முக்கியமானவர். இவர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நேரம்’ படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது.

Prithviraj, Nayanthara, Alphonse Puthren, Gold 23-Mar-2022

நேரம் படத்துக்குப் பின்பு அவர் இயக்கிய பிரேமம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியானாலும், மொழிப் பேதமின்றி தென்னிந்தியா முழுவதும் ஹிட் ஆனது. இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த மூவருமே இப்போது தென்னிந்திய சினிமாக்களின் முன்னணி நடிகைகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேமம் படத்துக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக அல்போன்ஸ் புத்ரன் எந்த படத்தையும் இயக்கவில்லை.

Prithviraj, Nayanthara, Alphonse Puthren, Gold 23-Mar-2022

மற்றும் பிரேமம் படத்துக்கு பின் தான் இயக்கபோகும் படமாக பாட்டு என்ற படத்தை அறிவித்தார். அந்த படத்தில் பஹத் பாசில் மற்றும் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. அந்த படத்துக்காக இசைக் கற்றுக்கொண்டதாகவும், அந்த படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவுள்ளதாகவும் அல்போன்ஸ் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இப்போது பாட்டு படத்துக்கு முன்னதாக அவர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது கோல்ட் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் ஓடும் அந்த டீசர், இசைக்கும், விஷ்வல்ஸ்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் நேரம் மற்றும் பிரேமம் படங்களின் ஸ்டைலில் ஸ்லோமோஷன் காட்சிகளில் பிருத்விராஜின் ஆக்‌ஷன் காட்சிகளோடு முடிவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கியூட்டான காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த டீசரில் இசையும் விஷ்வல்களும் பெரியளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்த படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் டீசர் வெளியாவதை ஒட்டி முன்னதாக அல்போன்ஸ் புத்ரன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். அந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ‘ஒரு 7 ஆண்டு சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் என்னுடைய கோல்ட் படத்தின் மூலம் திரும்பி வருகிறேன். உங்கள் அனைவரின் அன்பும் பிராத்தனைகளும் வேண்டும். டீசரை பார்த்துவிட்டு சொல்லுங்கள்’ எனக் கூறியிருந்தார்.